Thursday, June 20, 2013

என் வரிகள்

ஜடப்பொருளாய் இருந்த PC நான்
உயிர்கொடுத்த OS நீ
வன்பொருளாய் திரிந்த என்னை
மென்பொருளாய் திருத்தியவள் நீ
Empty CDயாக இருந்த என்னை
சங்கீத பேச்சினால் MP3 ஆக்கியவள் நீ
கணினி இயக்கும் உன் உள்ளங்கைக்குள்
கண்ணியமாய் சிறைபடும் mouse நான்
நீ இழுக்கும் திசைக்கு வரும்
ஜாய்ஸ்டிக் அடிமை நான்
நீ மடி கொடுப்பாய் என்றால்
உன் Laptop நான்
TYPE அடிக்கத் தெரியாத உன் பிஞ்சு விரல்களால்
செல்லக் குட்டுகள் பெறும் KEYBOARDநான்
உன் ஸ்பரிசம் எனை அழுத்தும் என்றால்
கணினியின் ON SWITCH நான்
நீ உற்று ரசிப்பாய் என்று தெரிந்திருந்தால்
ஒரு மானிட்டராயேனும் நான் பிறந்திருப்பேனே
Shut downஆகப் போனவனன் உனைப்
பார்த்த கணத்தில் REEboot ஆகிப்போனேனே!
கண்ணே! நீ சூடுவாய் என்றால்
நான் தான் உனக்கு வலைப்பூ
முப்போதும் என் மனத்திரையில் ஓடும்
UTUBE VIDEO நீ
அரட்டை பெட்டியில் வரும் Smily நீ
அனுதினமும் நான் தேடும் GOOGLE நீ
என் ஹார்ட்டிஸ்க் நிரப்பிய ஒரே கவிதை நீ
என் அறிவுக்கண்ணை திறந்த விக்கிபீடியா நீ
என் சொப்பனங்களை ஆக்ரமித்த ஸ்க்ரீன் சேவர் நீ
இருபத்து நான்கு மணிநேரமும் என்னுள் ஓடும் செர்வர் நீ
என் உள்ளத்தை அச்சடித்த கலர் பிரிண்டர் நீ
வைரஸ் தாக்கும் வரை தாமதிக்காதே
விரைந்து வா! நீயும் நானும் இந்த
இணையத்தால் இணைவோம்

No comments:

Post a Comment